Description
தென் தமிழகத்தின் கரிசல் பூமி கு. அழகிரிசாமி, கி.ரா போன்ற முன்னத்தி ஏர்கள் தொடங்கி பல இலக்கிய உழவர்களால் ஆழ உழப்பட்டதை நாம் அறிவோம். அதனை ஒட்டிய ராஜபாளையம் பகுதி, அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. அந்தப் பின்புலம் கொண்ட இலக்கியப் படைப்புகள் அதிகம் இல்லை.
ஆனால் எழுத்தாளர் பாரததேவியின் எழுத்தெல்லாம் அந்தப் பின்புலம் கொண்டவை. “மூன்றாங்கோழி” கூவ எழுந்து வேளாண் பணிகளைக் காலம் காலமாய்ச் செய்த அவரது அனுபவம் பலருக்கும் அப்பகுதியில் இருந்திருக்கும். ஆனால், அதனை நெஞ்சில் தைக்கும் கலைப்படைப்பாக்கும் அசாத்தியத் திறன், அம்மா பாரததேவி போன்ற சிலருக்குத்தான் வாய்க்கப் பெறுகின்றது. அவர் உருவாக்கும் அந்தப் புலத்தில் வாசிக்கும் நாமும் நம்மையறியாது கலந்துவிடுவோம்.