Description
மதுரை சந்திரோதயம் பதிப்பகம் வெளியிட்ட சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்ற நூல் முனைவர் சே ராஜேஸ்வரியின் மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வு நூல் வரிசையில் இரண்டாவது நூலாகும் இவ்வரிசையில் இதுவரை ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. என்னுள் ஆங்கிலக் கவிதைகளின் தமிழாக்கம் ஆகும்
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்ற இந்நூலில் காதல், இயற்கை, பெண்கள், என்ற தலைப்பில் மொத்தம் 20 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஃபிலிப் சிட்னி, கிரிஸ்டின ராசெட்டி, சாமுவேல் பெக்கெட், மாயா ஏஞ்சலோ, பி.பி. ஷெல்லி, ஆபிரகாம் கவ்லி, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாயா ஏஞ்சலோவின் 9 கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பாகும்.