Description
மிதித்துப் பாழாக்கப்பட்டு விட்ட கறி வறுவலைப் பார்த்ததும் அவர் கணநேரம் திடுக்கிட்டுவிட்டார். நொடிப் பொழுதுக்கு அவர் மனத்துள் திடுமென ஓர் எண்ணம் தோன்றிற்று: உடனே அங்கிருந்து நழுவி வெளியே போய்விடுவது மேலல்லவா? ஆனால் இது கோழைத்தனமாகுவென அவர் முடிவு செய்தார். யாரும் தம்மைப் பார்க்கவும் இல்லை, தம்மீது சந்தேகம் கொள்ளவும் மாட்டார் என்று வாதாடியவாறு அவசரமாகத் தமது பூட்ஸ் மேலுறையைத் துடைத்து அதில் ஒட்டியிருந்தவற்றை அகற்றிவிட்டு, ஒட்டுக் கம்பளியிட்ட கதவைக் கையால் துழாவிக் கண்டுபிடித்துத் திறந்தார். மிகச் சிறிய நுழைவு அறையினுள் அவர் அடியெடுத்து வைத்தார்.