Description
பிரிவினைக் கலவரங்கள் வந்தபோது கூட அமைதி காத்த பூமி நம் தமிழகம். அந்தப் பெருமைக்கு நிகழ்ந்த மிகப்பெரிய களங்கம் 1997-98 கோவை வன்முறைகள். இது குறித்த ஒரு நேரடி சாட்சியாய் இருந்து துணிச்சலுடனும் நேர்மையுடனும் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ஏ. வி. அப்துல் நாசர் அவர்கள். அந்த வகையில் இது ஒரு மிக முக்கியமான பதிவு. ஒருவேளை இதில் சொல்லப்பட்ட தரவுகளில் சிறுபிழைகள் இருக்கலாம். ஆனால், அடிநாதமாக இதில் இழையோடுவது உண்மை; சத்தியம்! - அ. மார்க்ஸ்