அருள் தரும் யோகி ஸ்ரீ அரவிந்தர்


Author: பா.சு. ரமணன்

Pages: 128

Year: NA

Price:
Sale priceRs. 180.00

Description

என் வாழ்க்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது. ஏனெனில் அது எல்லாரும் பார்க்கும்படியாக மேற்பரப்பில் நிகழ்ந்ததன்று" என்று யோகி ஸ்ரீ அரவிந்தரின் கூறியிருக்கிறார். நமக்குத் தெரிந்த விஷயங்களே இவ்வளவு மலைப்புத் தருவதாக இருக்குமானால், அவரின் அறியப்படாத அந்த ஆன்மிக மறுபக்கத்தை நாம் என்னவென்று வரையறுப்பது? என் மலைப்பைத் தருகிறது பா.சு.ரமணன் எழுதியுள்ள அருள் தரும் யோகி ஸ்ரீ அரவிந்தர் என்ற இந்த நூல்.

ஸ்ரீ அரவிந்தர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். இரக்க குணம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். பத்திரிக்கையாளர். கட்டுரை ஆசிரியர். இதழாளர், சுதந்திரப் போராட்ட வீரர் - எனப் பல முகங்கள் கொண்டவர். ஆனால் இவற்றில் எதுவும் ஒட்டாத, முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாய் விளங்குவது தான் அவரது யோகத் திருமுகம்.

அரவிந்தரைப் பற்றி பல விஷயங்களை விவரிப்பதோடு, ஸ்ரீ அன்னைக்கு அவர் அளித்த முக்கியத்தும், அரவிந்தரின் ஆஸ்ரமத்தை அன்னை நடத்திச் சென்ற விதம் ஆகியவையும் இந்த நூலில் விரிக்கப்பட்டுள்ளது. வெறும் ஆன்மிக நூலாக மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட வரலாற்றின் இறுக்கமான பக்கங்களையும் படிப்பவர்களுக்கு உணர்த்தும் நூலாக அமைந்துள்ளது.-- இளங்கோவன்.

You may also like

Recently viewed