Description
எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழர்கள் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்ட பிரபல எழுத்தாளர். வானம் வசப்படும் என்ற புதுச்சேரி வரலாற்று நாவலுக்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றவர். புதுச்சேரி அரசால் 10 லட்சம் ரூபாய் பணமும் அதற்கு முன்னர் வீடும் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். அரசு மரியாதையுடன் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட மறக்கமுடியாத மறக்கப்படக்கூடாத மாபெரும் எழுத்தாளர் பிரபஞ்சன்.
எழுத்தாளர் பிரபஞ்சனுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு கொண்ட பேராசிரியர் P. ராஜா அவர்கள், நான் "ராஜ்ஜா" என்று தமிழ் எழுத்துலகில் அழுத்தம் திருத்தமாக தடம் பதித்தவர். ராஜ்ஜா அவர்கள் எழுத்தாளர் பிரபஞ்சனுடனான தன்னுடைய 45 ஆண்டுகளுக்கு மேலான நட்பைப் பற்றி "புதுவை பாரதி" மாத இதழில் எழுதிய தொடர் இப்போது புத்தக வடியில் வெளிவருகிறது, ஏழு இதழ்களில் வெளியான இந்தத் தொடர் புகழ் பெற்ற இரு எழுத்தாளர்களுக்கு இடையே இருந்த ஆழமான நட்பை காட்டுகிறது. அன்பையும் மதிப்பையும் புலப்படுத்துகிறது.
இந்த புத்தகத்தை படிக்கும்போது ராஜ்ஜா அவர்களே நேரில் அமர்ந்து நம்மிடம் பேசுவது போல வெகு இயல்பான நடையுடன் இருக்கிறது