நான் கே.எஸ்.பேசறேன்


Author: லதா ராமகிருஷ்ணன்

Pages: 330

Year: NA

Price:
Sale priceRs. 350.00

Description

கே.எஸ். என்று நண்பர்களால் அறியப்படும் டாக்டர் கே. சுப்பிரமணியன் எழுதியுள்ள தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் தலா ஆறு உள்ளன, அவருடைய நேர்காணல் ஒன்று (ஆங்கிலத்தில்), அவர் தமிழில் மொழிபெயர்த்த டாக்டர் மணி பௌமிக்-கின் புகழ்பெற்ற நூலான "கோட் நேம் காட்' (கடவுளின் கையெழுத்து) நூலிலிருந்து இரு அத்தியாயங்கள், அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆறு கட்டுரைகள், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த ஆறு கட்டுரைகள், கே.எஸ். மறைந்தபோது அவருடைய நண்பர்களால் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் பத்து ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல்.

ஜெயகாந்தன் குறித்த சில புதிய செய்திகள், புதுக்கவிதையின் பிதாமகன் என்று அறியப்படும் ந. பிச்சமூர்த்தி குறித்த கட்டுரையும், கவிதைகளும் அருமை. ஆங்கிலக் கட்டுரைகளில் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனுக்கு கே.எஸ். எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரையும் பிலிப்பின்ஸ் குறித்து எழுதப்பட்ட கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. பாரதியார் தொடங்கி எம். யுவன் வரையிலான ஐம்பத்தெட்டு பேரின் நவீன கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

கே.எஸ். மறைந்தபோது அவரின் நண்பர்கள் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகளில் சிற்பி பாலசுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், ரவி சுப்பிரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன.மொழிபெயர்ப்பாளராக மட்டுமே அறியப்பட்ட டாக்டர் கே.சுப்பிரமணியனின் பன்முக ஆளுமையை அறிய உதவுகிறது லதா ராமகிருஷ்ணனின் இத் தொகுப்பு.

You may also like

Recently viewed