Author: க.அம்சப்ரியாவின் சாக்பீஸ் கவிதைகள்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகளல்ல; உங்கள் வழியாக இப்பூமிக்கு வந்தவர்கள்’ என்றார் கலீல் ஜிப்ரான். நம் குழந்தைகள்தானே என்கிற உரிமையிலும் அக்கறையிலும் குழந்தைகள்மீது நாம் அதிகாரத்தையே செலுத்திவருகிறோம் என்பதைப் பல நேரங்களில் பெற்றோரான நாம் உணர்வதேயில்லை. பொதுவெளியில் குழந்தைகளின் அகவுலகம் சார்ந்து இன்னமும் பேசப்படாத, கவனிக்கப்பெறாத பல நூறு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழில் குழந்தைகளின் நிராதரவான ஏக்கப் பெருமூச்சு படைப்புகளின் வழியாக மெல்ல மேலெழுந்துவரும் சூழலில் வெளிவந்திருக்கிறாள் இந்த ‘அதிஸ்யா’. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டும், கல்விப் பணியில் ஈடுபாட்டோடு செயல்பட்டுக்கொண்டும் இருக்கும் கவிஞர் க.அம்சப்ரியாவின் பல கவிதை நூல்களிலிருந்து குழந்தைகளின் மனவுலகம் சார்ந்த கவிதைகளை மட்டும் தேர்வுசெய்து தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் ப்ரியம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையே இந்நூலிலுள்ள எல்லாக் கவிதைகளின் ஊடாகவும் கண்டுணர முடிகிறது. குழந்தைகள் உலகின் மையக்குரலாக அதிஸ்யாவின் குரல் கவிதைகள்தோறும் ஒலிக்கிறது. ‘அதிஸ்யாவிடம் அவர்கள் / ஓர் ஆப்பிள் துண்டைத் தந்தார்கள் / வேணிக்குக் கொஞ்சம் / விசாலாட்சிக்குக் கொஞ்சம் / உமாவுக்குக் கொஞ்சம் / ரித்திகாவுக்குக் கொஞ்சமென / காக்காக்கடி போட்டுக்கொண்டே இருந்தாள் / ஆப்பிள் துண்டு / ஆப்பிள் தோட்டமாகிக்கொண்டிருந்தது’ எனும் வரிகளில் உலகக் குழந்தைகளின் ஒற்றைப் பிரதிநிதியாக நம் முன்னே புது ரூபம் கொள்கிறாள் அதிஸ்யா. குழந்தைமையைத் தொலைத்துவிடாத மனதோடு அதிஸ்யாவையும் சுமந்துவரும் க.அம்சப்ரியாவின் இக்கவிதைகள், நமக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான புரிதலைத் தருவதில் துணைநிற்கின்றன.

You may also like

Recently viewed