Description
தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப் பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்டக் குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத்தகாத சொற்களை பண்பாடு
கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லை பயன்படுத்துவதுமே குழுவுக்குறி.
இந்த ஒரு இலக்கணம் crypto currency என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை மெளனமாக பிடித்து வரும் ஒரு பொருண்மைக்கும் பொருந்தும் மின் எண்ணியியல் யுக மாற்றத்தின் அடுத்த அடையாளமாகும். இந்த மின் எண்ணியியல் செலாவணிகள் பல கா ரணங்களுக்காக மறைக்குறியீடுகளால் அடையாளப் படுத்தப்படுகின்றன. ஒரு நாணயத்தின் மதிப்பை இரும சங்கேத எண்களாக் காட்டுவதைத்தான் இங்கே மறைக்குறியீட்டாக்கம் என்று சொல்கின்றோம். இவற்றைப் பற்றிய புரிதல் பொது மக்களுக்குத் தேவை. ஏனெனில் நாளைய பொருளாதார உலகு இந்த எண்ணியியல் செலாவணிகளைச் சார்ந்ததாக இருக்கக் கூடும். மின் எண்ணியியல் செலாவணியின் ஒரு பிரிவே இந்த மறைக்குறியீட்டாக்க சங்கேத செலாவணி.