Description
இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற இந்த நூலைப் படிக்கும் போது, அதில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் உண்மைகள்தான் இதன் சிறப்பாகும். திராவிட இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல் வரிசையில் இதுவும் முக்கியமானது. குடந்தையில் நடந்த ஒரு மாநாட்டிலேயே கறுப்புச் சட்டைப் போடாமல் அண்ணா பேசியது, பெரியாரைச் சற்றும் கலந்து கொள்ளாமல் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது. பெரிய கலவரம் நடந்த மதுரை மாநாட்டிற்கு அண்ணா வராமல், தஞ்சையில் நடந்த கே.ஆர்.ராமசாமி நாடகக் கொட்டகையில் போய்த் தங்கியது & இப்படி நிகழ்வுகள் பல அரங்கண்ணலால் பதிவு செய்யப்படுகிறது. தி.மு.கவிலிருந்து விலகி “தமிழ்த் தேசியக் கட்சி” ஆரம்பித்த ஈ.வெ.கி. சம்பத்தை அரங்கண்ணல் கிட்டதட்ட ஒரு வில்லனாகவே சித்தரிக்கிறார். இந்தச் சித்தரிப்பு சரியில்லை என்பதே என் பார்வையாகும்.
– சிகரம் ச.செந்தில்நாதன்