Description
வாழ்தல் குறித்தான விசயமின்மை” கதாபாத்திரங்கள் வழியே உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. “கடவுளும் அவரது குமாரனும்” கதையில் மொஹம்மத் ஹூசைன், “தக்கையிலானது” கதையில் வரும் பயில்வான் ராமுத்தம்பி போன்றோர் சறுக்கிவிட்ட தங்களது வாழ்க்கைத் தடங்களை இழத்தலின் மூலமாக நேர்செய்யப் பார்க்கின்றனர். “வாய்மை எனப்படுவது சாம்பல்” கதை பொதுவுடமைச் சித்தாந்தம் பேசுகிறது. ”மோகினி”யில் ராமசாமி ஐயர் மூலம், சாதி கொண்டு உணர்வுகளை அளவிடும் சமூகத்தின் தலைகளில் இடியென இறக்குகிறார் எழில்பாரதி. காதல், கம்யூனிசம், சாதி, சினிமா என ஒவ்வொரு கதைத் தளத்திலும் அந்தந்த கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நேரிய எழுத்தாளராக எழில்பாரதியே நம்மோடு பேசுகிறார். ரஷ்யப் புனைவுகளின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஏற்படும் வாசிப்பனுபவம் மேலோங்கி நிற்கிறது.