தமிழியல் ஆளுமைகள்-1


Author: ப.திருஞானசம்பந்தம்

Pages: 232

Year: NA

Price:
Sale priceRs. 230.00

Description

தமிழாராய்ச்சி வரலாற்றில் பெரும் பங்களிப்பைச் செய்த அறிஞர்கள் குறித்த ஆவணமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். தமிழில் பிழையின்றிப் பேச, எழுத தேவையான கருவி நூல்களை உருவாக்கியவர் அ.கி.பரந்தாமனார், மூலநூலிலுள்ள எந்தச் சிறிய குறிப்பையும் தவறவிட்டு விடாமல் முழுமையான உரை காணும் பண்பைக் கொண்ட ஒளவை துரைசாமிப் பிள்ளை, புதிய ஒளியும் உயிரும் பாய்ச்சிய சுடர்மணிகளுள் ஒருவர் அ.சிதம்பரநாதனார், சிறந்த சொற்பொழிவாளர் ஒளவை நடராசன், முக்கியமான ஆய்வுகளை வழங்கிய சுப.
அண்ணாமலை, தமிழாராய்ச்சி மரபில் நூற்றுக்கும் அதிகமான ஆய்வு நூல்களை எழுதிய மா.இராசமாணிக்கனார், பாரதிதாசன் தலைமையில் மூன்று முறை கவியரங்கேற்றிய இராம.பெரியகருப்பன் என ஏழு பெரும் ஆளுமைகள் தமிழுக்கு ஆற்றிய பணிகள் எளிய நடையிலான கட்டுரைகளாக நூலில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் குறித்து ப.திருஞானசம்பந்தம், ம.திருமலை, மு.கற்பகம், ம.பெ.சீனிவாசன், கி.சிவா, த.முத்தமிழ், த.தனஞ்செயன், கு.முதற்பாவலர் ஆகியோர் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். ஆய்வு செய்வோருக்கான கருவி நூலாக நூல் அமையும்.

You may also like

Recently viewed