Description
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் மணிச் சத்தமும் இலுப்பை மர நிழலும் குளுகுளு பதநீரும் இன்னும் இன்னும் நாம் இழந்தவை எல்லாம் நினைத்து பெரும் ஏக்கமே ஏற்பட்டுவிடுகிறது.
மனிதன் இயற்கையின் குழந்தை என்கிற வகையில் இயற்கையின் நலம்தான் மனிதனின் நலம், இயற்கையோடு இயைந்து வாழ்வதே நம் முன் இருக்கும் ஒரே தீர்வு என்பதை நம் மரபுசார்ந்த உணவுப்பழக்கங்கள் வாயிலாக முன்வைக்கிறது இப்புத்தகம்.
கார்த்திக் செல்வக்குமார்