Author: ராஜசங்கீதன்

Pages: 160

Year: 2022

Price:
Sale priceRs. 180.00

Description

உண்மையில் பூமிக்கு அந்நியமான ஜீவராசி மனிதன் தான்’ என்கிறார் சங்கீதன். இதைப் பெரியாரே ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்பதைச் சொல்லி, ‘கொடுமை கொடுமை மானிடராய் பிறத்தல் கொடுமை’ என்றவர் அவர். ஆம், மனிதனுக்கு முன்னால் இந்த உலகம் இருந்தது. மனிதனே இல்லாததாகவும் உலகம் ஒருநாள் கழியும்.

யுவால் நோவா ஹராரியின் புத்தகத்தை படித்துவிட்டு சில வாரங்கள் நான் மனவருத்தத்தில் இருந்தேன். இனி எதுவும் பேசுவதும், சிந்திப்பதும் தவறோ என்று கூட நான் நினைத்தேன். ‘வரலாறு நமக்கு எந்த சிறப்புத் தள்ளுபடியும் கொடுப்பது இல்லை’ என்கிறார் அவர். மனிதன் தேவைப்படாத உலகத்தை நோக்கிய பயணம் தான் இன்று கழியும் நாட்கள் எல்லாம் என்பது அந்தப் புத்தகத்தின் மூலமாக அறிந்தேன். அப்படி இருக்கும்போது எதற்கடா சர்வாதிகாரம், எதேச்சதிகாரம், வன்மம், பணம் எல்லாம் என்று கேட்கிறார் ராஜசங்கீதன்.

You may also like

Recently viewed