Description
தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. அணு சோதனையின் போது உண்டாகும் பெருங்குழியைப் போல கதிர்வீச்சுடன் கூடிய ஒரு மாபெரும் வெற்றிடம் அவனுக்குள் நிரந்தரமாய் உண்டாகிவிடுகிறது. சொற்களால் சுற்றிவலைக்கப்படும் ஏதோவோர் கணம் அவனை முன்னோக்கி உந்திக்கொண்டேயிருக்கிறது. அதனால் அவன் எழுதுகிறான்; ஓயாமல் எழுதுகிறான்; தொடர்ந்து எழுதுகிறான்; தாய் மடியில் பாதுகாப்புடன் விளையாடும் குழந்தையென மொழியின் மடியில் சொற்களோடு விளையாடியபடியே அவன் எழுதுகிறான். அப்படி ஒருவனால் எழுதுப்பட்டதுதான் இத்தொகுதி.
நிறை நேசங்களுடன்,
வழிப்போக்கன்