Description
வட இந்தியாவில் ஜான்சியின் ராணியாக விளங்கிய லஷ்மி பாய், ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது இந்திய அளவில் அறியப்பட்ட செய்தியாக இன்றளவும் உள்ளது. ஆனால் ஜான்சி ராணிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, பிரிட்டீஷ் படைக்கே தண்ணி காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார் பெயர் இந்திய அளவில் கொண்டு செல்லப்படவே இல்லை. வேலுநாச்சியரை பற்றி பல நூல்கள் வந்திருந்தாலும் இந்நூல் சொல்லப்படாத பல செய்திகளை சான்றுகளோடு பேசுகிறது. குறிப்பாக, அன்று வாழ்ந்த ஆங்கிலேயே அதிகாரிகள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளில் வேலு நாச்சியாரையும் - மருதுசகோதர்களையும் - சீவகங்கைச் சீமையில் வாழ்ந்த மக்களையும் - எடுத்துரைக்கும் போது வியப்பாக உள்ளது. படிப்போர் மனதில் திரைப்படம் போல் கண்முன் நின்ற காட்சிகளாய் விரியும். வீரமங்கை வேலுநாச்சியரின் வாழ்க்கை வரலாற்றை வருங்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்நூல் மண் விடுதலைக்கான வழிகாட்டி!