Description
கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் ஹமார்ஷியா மிகவும் புதிய கதைக்களனை தன்னுள் கொண்டு விரிகிறது. அமைந்த ஆட்டத்தில் கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். ஹமார்ஷியா என்கிற சொல் நம்மை வியப்பு, பதைபதைப்பு, பச்சாதாபம், அமானுஷ்யம், கருணை என பல்வேறு உணர்தலுக்கு உட்படுத்துகிறது. சொல்லப் பட்டுள்ள எதிர்கால அரசியல் கோட்பாடு குறித்த வாதப் பிரதிவாதங்கள், கதை வடிவில் ஆழ்மனப் புரிதலை வாசகர் மத்தியில் ஏற்படுத்த முனைவது சிறப்பு. கதை சொலல் உத்தியில் ஹமார்ஷியா நாவல் தனதான இடத்தைப் பிசகறப் பற்றும்