Description
இரண்டாம் உலகப்போருக்கு மூலகாரணமாக விளங்கியவர்
ஜெர்மன் சர்வாதிகாரி அடாலப் ஹிட்லர். அவரின் இறுதிக் காலம்
வரை அவருடைய படைத்தளபதிகள் அவருடன் இணைந்து
போரிட்டார்கள். போர்க்களங்களில் ஹிட்லரின் தளபதிகள்
பயன்படுத்திய உத்திகள் இன்றும் நவீனப் போர்களில் உலகம்
முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹிட்லரின் வாழ்க்கை ஒரு மர்ம நாவலைப் போன்று பல
திருப்புமுனைகளைக் கொண்டது. ஹிட்லரைப் பற்றி ஏராளமான
நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஹிட்லரின் மின்னல்
வேகப் போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அவரது
தளபதிகள் பற்றி தமிழில் நூல்கள் இல்லாமல் ஒரு பெரும்
இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை இந்த நூல் நிறைவு
செய்கிறது.
இந்நூல் ஹிட்லருக்கும் அவரது தளபதிகளுக்கும் இருந்த
உறவு, அவர்களுடைய வீரம், திட்டங்களை வகுப்பதிலும், அதை
செயல்படுத்துவதிலும் இருந்த திறமை, அவர்களின் தனிமனிதப்
பண்புகள் மற்றும் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களின்
கருத்துக்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, தமிழில்
இதுவரை வெளிவராத தகவல்களைக் கொண்டு தொகுத்து
நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளது.