Description
மது ஸ்ரீதரனின் முதல் புத்தகம் இது, அறிவியல் மற்றும் தத்துவம் தொடர்பான மிகவும் சிக்கலான கட்டுரைகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது சாதாரண விஷயமல்ல. முதல் புத்தகம் என்றாலும். இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன். தொடர்ச்சியாகஃபேஸ்புக்கில் எழுதிவருவதால் இத்தனை அழகான எழுத்து நடை இவருக்குக் கை வந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதும், மீண்டும் அதைத் தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்துவதுமாக, எடுத்து க்கொண்ட விஷயத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகிச் செல்லாமல் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. எப்போதும் நாம் அதிசயமாகப் பார்க்கும் விஷயங்களை எடுத்து க்கொண்டு, அதன் புராணக் காலத் தொடர்புகளைச் சொல்லி, அதன் எதிர்கால விரிவான சாத்தியங்களையும் சொல்வதோடு, அதற்கான அறிவியல் பின்புலத்தையும் விளக்கி இருப்பது சிறப்பு. * மலையைச் சுமக்க முடியுமா? * யார் கண்ணுக்கும் படாமல் மறைந்து போக முடியுமா? * வயதாகாமல் வாழ முடியுமா? நீரில் நடக்க முடியுமா? * உயிரிழந்தவர்களைப் பிழைக்க வைக்க முடியுமா? இது போன்ற இன்னும் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாக விளக்கி இருக்கிறார் மது ஸ்ரீதரன்.