சியமந்தகம்: ஜெயமோகன் 60


Author: ஜெயமோகன் தொகுப்பாசிரியர் சுனில் கிருஷ்ணன்

Pages: 860

Year: 2022

Price:
Sale priceRs. 900.00

Description

ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.

You may also like

Recently viewed