Description
தம்ழயாந்த தமிழுலக அறிஞர்களால் அறிந்த புலவர் தா.கோவேந்தனின்
திருமகன் ஆவர் இந்நூலாசிரியர். இவரது தந்தை பாரதிதாசனின்
அணுக்கத் தொண்டர். இவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அணுக்கத்
தொண்டர். பத்திரிகையாளர். எழுத்தாளர். பதிப்பாசிரியர்.
ஜெயகாந்தனின் சக்ருத்யர்களில் ஒருவர். அவரோடு எழுத்துப்பணி,
சமூகப்பணி. பத்திரிகைப் பணி, பதிப்புப் பணிகளில் பணியாற்றியவர்.
அவர் மறைவுக்குப் பின்னும் அவரது குடும்பத்தினரோடு நல்லுறவு
கொண்டவர்.
ஜெயகாந்தன் மறைவுக்குப் பின் அவரது வெளிவராத கட்டுரைகள்.
பேட்டிகள். சிறுகதைகளை நூல் வடிவம் கொணர்ந்தவர்.
இவரது இந்த நூல் ஜெயகாந்தன் அவர்களின் காலமும் கருத்தையும் முழுவடிவமாய் காட்டும் சொல்லோவியம்.