Description
உங்கள் குழந்தையை குப்பர் குழந்தையாக்க வேண்டுமா? இந்த ஒரு புத்தகம் போதும். இது புத்தவமல்ல, என்சைக்ளோபீடியா, வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் நம் குழந்தை களுக்குக்கிடைக்கும் சூழ்நிலையானது. நிஜமான புற உலகைப் பிரதிபலிக்காதவண்ணம் இருக்கிறது. ஒரு சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தப் பழக்கி, ஒரு மந்தையில் இன்னொரு செம்மறியாடாய் அவர்களை மாற்றுகிறது. ரிஸ்க் ஏதுமில்லாத, கூட்டத்தோடு கோவிந்தா போடும் தனித்துவம் இல்லாத ஒரு ஜெராக்ஸ் காப்பியாக வளர்கிறது நம் குழந்தை, குழந்தை வளர்ப்பின் அனைத்துச் சிக்கல்களையும் விவரித்து, அதற்கான தீர்வுகளையும் தருகிறார் பிரகாஷ் ராஜகோபால், பிறக்கும் குழந்தையைப் பெற்றோர் எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது தொடங்கி, அக்குழந்தை வளர்ந்து பதின்ம வயது வரும் வரையில், அதை எப்படிப் பயிற்றுவிக்கவேண்டும் என்பதையும் விவரிக்கிறார். பொதுவாக இதுபோன்ற புத்தகங்கள், மேல்தாட்டுப் பார்வையில் எழுதப்படும். இந்தியக் குழந்தைகளை மறந்துவிடும். ஆனால் இந்த நூல் இந்தியக் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனித்துவமாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலின் சிறப்பம்சம் என்ன? உங்கள் குழந்தையை சூப்பர் குழந்தையாக்கத் தேவையான கற்றல் பொருள்களுக்கு (Leaming Tools) நீங்கள் லட்சக் கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. நீங்களும், உங்கள் வீடும், வீட்டில் இருக்கும் சாதரணப் பொருள்களும், குழந்தையின் பள்ளிக்கூடமும் போதும். ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டு அறிவுரைகளை அள்ளித் தெளிக்காமல், சக பெற்றோராக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் விளையாட்டுகளையும் அறிவுரைகளையும் செயல்படுத்த முடிந்தால், ஒவ்வொரு குழந்தையும் சூட்பர் குழந்தைதான். திருமணம் செய்யவிருக்கும் இளைஞர்களும், இளம் பெற்றோர்களும் தவறவிடக்கூடாத புத்தகம்,