மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும்

Save 3%

Author: அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

Pages: 720

Year: 2011

Price:
Sale priceRs. 620.00 Regular priceRs. 640.00

Description

மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்' ஓர் உயரிய நூல். அந்தக் காலத்து நீதி, நியாயங்களை, தர்மங்களை எடுத்து இயம்பும் நூல். நீதி, நியாயங்கள், தர்மங்கள் எந்தக் காலமாயினும் ஒன்றுதான். எனினும் இப்போது எல்லாமே மாறிவிட்டது. அதனால்தான் அந்தக் காலத்து நியாயம் என்று பிரித்துக்கூற வேண்டியுள்ளது. இந்தக் காலத்தில் எது நீதி, எது நியாயம் என்றே தெரியவில்லை. தான் செய்வதே நியாயம், தான் சொல்வதே நீதி என்று சாதிக்கும் இந்தக் காலத்துக்கு இப்படி ஒரு நூல் தேவைதான். எது நீதி, எது நியாயம், எது தர்மம் என்பதை உணர இந் நூல் வழி காட்டும். தர்ம நியாயங்களை உணர்ந்தவர்கள் என்றும் புறந்தள்ளப் பட்டதில்லை. இந் நூலை ஒன்றுக்குப் பலமுறை படியுங்கள். உண்மைகளை, நீதி, நியாயங்களை உணர்ந்து உங்களால் செயல்பட முடியும்; வாழ்வில் உயர்வடைய முடியும்; உன்னத புருஷர்களாக வாழ்ந்து காட்ட முடியும். ஆசிரியை அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா சமஸ்கிருத ஸ்லோகங்களோடு எளிய தமிழில் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்கள். இதை ஒரு சிறந்த ஆவணமாகக் கொள்ளலாம். எனவே இன்றே இந் நூல் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

You may also like

Recently viewed