Description
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும் பலவீனமும். ‘இத்தொகுப்பின் கவிதைகள், பூக்களின் எல்லாப் பருவங்களின் தன்மையையும் கொண்டிருக்கின்றன’ என்பது விமர்சனமும் பாராட்டும்.
- கவிஞர் வெய்யில்