Description
சென்றதினி மீளாது' என்பது பாரதி முடிபு.
இம்முன்முடிவில் உடைப்பை உண்டாக்கி, புதிய தெம்பை
நல்கும் நல் ஆய்வுப் பெட்டகம்தான் 'யாமறிந்த புலவன்'.
இதன் உள்ளடக்கமாகக் கடந்த 100 ஆண்டுகளில் அச்சான
பல்வேறு விமர்சனப் பிரதிகள் காலவரிசையில்
தொகுக்கப்பட்டுள்ளன. அதுவே இந்நூலின் இலக்கு.
அதாவது 1918இல் தொடங்கி 2021 வரை அச்சான விமர்சனக்
கட்டுரைகளை ஒழுங்குபடுத்தித் தரும் பணி.
ஆதாரப்பூர்வமான பத்திரிகைகளைக் கண்டறிந்து, நிரல்
செய்வது அதன் அளவீடு. மூலத்தை ஒப்பிடாமல்
பயன்கொள்ள மறுப்பது. கட்டுரைகளில் பிசகிருந்தால்
நிராகரிப்பது. இந்நூல் அவ்விதியின் முறைப்படி
உருவாகியுள்ளது. ஆகவே, இதொரு கறாரான விமர்சனப்
பெட்டகம்.
முதல் பகுதியாக 135 கட்டுரைகள் கண்டறியப்பட்டு, இதில்
சேர்க்கப்பட்டுள்ளன. மறு பகுதியாகப் பாரதி பற்றிய பலரது
சொற்பொழிவுகளைத் தேடி எடுத்துத் துல்லிய சான்றுகளுடன்
தந்துள்ளது. சொல்லப் போனால் இது ஒரு தனித்துவமான
முயற்சி. பாரதி இயலில் வலுவான தடத்தைப் பதிக்கிறது
இந்நூல்.