Description
திசைகளின் நடுவே என்னும் இந்நூலின் பெயருக்கேற்ப இத்தொகுப்பு எழுதுகையில் நான் என் எதிர்காலத் திசைகளின் நடுவேயுள்ள புள்ளியில்தான் நின்றிருந்தேன். பலவகையான கதைக்கருக்கள், விதவிதமான கூறல்முறைகள் நிரம்பிய தொகுப்பு இது.
இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்கச் சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துணிவேன்.
– ஜெயமோகன்