மதுவைக் கட்டுப்படுத்த எளிய வழி


Author: ஆலன் கார் தமிழில் பிரின்ஸ் கென்னட்

Pages: 288

Year: 2022

Price:
Sale priceRs. 270.00

Description

மதுவைக் கட்டுப்படுத்த எளிய வழி “ஆலன் கார் புத்தகங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையை மாற்றிய பலரை எனக்கு தெரியும்" சர் ரிச்சர்ட் பிரான்சன் விர்ஜின் விமான சேவை நிறுவனர் மன வலிமையை பயன்படுத்தாமல் மதுவை நிறுத்த உதவும் தனித்தன்மை வாய்ந்த புத்தகம் ● எளிதாக, உடனடியாக, துன்பமில்லாமல் மதுவை நிறுத்த உதவும் மது அருந்த வேண்டும் என்ற விருப்பத்தை உங்கள் மனதிலிருந்து நீக்கும் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். மதுவை நிறுத்த உதவுவதில் உலகின் முன்னணி நிபுணராக தன்னை ஆலன் கார் நிலைநிறுத்திக் கொண்டார். இவருடைய புரட்சிகரமான வழி பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. நாம் ஏன் மது அருந்துகிறோம் என மிகவும் தெளிவாக, எளிமையாக விவரிக்கிறார். மேலும், படிப்படியாக எப்படி மதுவின் பொறியிலிருந்து விடுபடுவது எனவும் விளக்குகிறார். பிரின்ஸ் கென்னட் இப்புத்தகத்தை ஒரு பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய தமிழ் நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். ஒரு இயந்திரவியல் பொறியாளராக கால் பதித்த இவர் உளவியல் (Psychology), உளவியல் ஆலோசனை (Counselling) மற்றும் ஆண்கள் மனநல மேம்பாட்டு உளவியலில் சிறப்பு மேற்படிப்பையும் படித்து முடித்து, உளவியலாளராக பணியை தொடர்கிறார். தமிழ் மொழி, மக்கள், தமிழ் மண் மீது தீராத பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர். ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புகளை துவக்கி, அதன் மூலம் தமிழ்நாட்டில் விவசாய கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவது, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறார்.

You may also like

Recently viewed