தென்புலத்து மன்பதை தொ.பவின் கட்டுரைகளும் நேர்காணல்களும்


Author: தொ.பரமசிவன் தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்

Pages: 559

Year: 2023

Price:
Sale priceRs. 500.00

Description

எல்லா விதமான அதிகாரங்களையும் உடைப்பதுதான் பெரியாரியம்! திராவிட இயக்கச் சிந்தனை, மானிடவியல், சமூக நீதி, வெகுமக்கள் பார்வை, விவசாய மக்கள் தொடர்புடையதாக ஒவ்வொன்றையும் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பு, நாட்டார் வழக்காறுகளில் அக்கறை, தமிழ்த் தேசிய உணர்வு, அம்பேத்கரியச் சிந்தனை ஆகியவை தொ.ப.வின் எழுத்துக்களில் பரவலாகக் காணப்படுகின்றன. மாணவர்களிடமும் இவற்றை விவாதிப்பார். அதன் மூலம் மாணவர்களுக்கான ஆசிரியராக அவர் திகழ்ந்தார்.

மாணவர்களோடு உரையாடுவதை அவர் பெரிதும் விரும்பினார். களஞ்சியமாக அவர் விளங்கினார். எழுதுவதை தகவல் விட உரையாடுவதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். பரந்துபட்ட வாசிப்பு அவருக்கு இருந்தது. தனித்தன்மையான முறையியல் அவருடையது. மானிடவியல், சமூகவியல், மொழியியல், இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் போன்ற பல புலங்கள் சார்ந்த நூல்களைக் கற்றுத் தமது அறிவைப் பெருக்கிக் கொண்டவர் என்பதால் அவரது உரையாடல்களும் கட்டுரைகளும் நுட்பமானவையாக விளங்கின. தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தமிழ் மரபையும் புற மரபையும் கட்டிக் காட்டுவது அவருடைய தனிப் பாணி.

நா. இராமச்சந்திரன், இயக்குநர்,
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை

அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழகக் களத்தில் ஒலித்த பெரியாரின் குரலுக்கும், அவருக்குப் பின் கால் நூற்றாண்டிற்கும் மேலாக எளிய மக்களின் விடுதலைக் குரலாக பெரியாரியப் பார்வையில் ஒலித்த தொ.ப.வின் குரலுக்கும் ஒரு ஒற்றுமையைக் 'காண இயலும். - பெரியார் ‘மானுட குலத்தின் விடுதலையைத்’ தேடினார் எனில், அவ்விடுதலைக்கான ‘பண்பாட்டு வேர்களை' தொ.ப. அடையாளம் காட்டினார் என்பதில் தான் அந்த ஒற்றுமை அடங்கியுள்ளது.

ஏ.சண்முகானந்தம்

You may also like

Recently viewed