Description
இந்த நூலில் வரும் கட்டுரைகள், தமிழ்ச் சிந்தனையின் மிகச்சமீபத்திய போக்குகளை எடுத்துரைக்கின்றன. பழமையில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் தமிழ் இனம், பெரிய அடையாளமான திராவிடத்தை விட்டு விடவில்லை. மேற்கின் தாக்கத்தால் புதிய சிந்தனைகள் வந்ததையும் மறுக்கவில்லை. பழமை மாறாமல், புதிய வானின் வெளிச்சத்தையும் விட்டுவிடாமல், மாற்றத்தைத் தன் பாதையில் எதிர்கொள்கின்றது தமிழ். அத்தமிழில் மார்க்சியம் உண்டு; நீட்சேயின் தத்துவம் உண்டு. சங்கத் தமிழின் ஆழமும் உண்டு. ஈழத்தின் துயர் கவிகின்றது. எனினும் எதிர்காலக் கனவும் இல்லாமல் இல்லை. இத்தகைய பல்வேறு தளங்களைக் காட்டும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்பவர்களுக்கான நூல். இதுபோல் ஒரு நூல் தமிழில் வந்ததில்லை. தீராநதி இதழில் மாதம்
தோறும் எழுதப்பட்டவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்த தமிழவன் எழுதியவை. தமிழ் வாசகர்கள் கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டும். பல்வித கேள்விகளுடன் ஓடும் மக்களின் வாழ்வைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் பார்க்காத இன்னொரு கோணம் இந்த நூலில் வெளிப்படுகிறது எனலாம்.