Description
சித்தர்களைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் வெறும் பெயர்கள், சில மேலோட்டமான தகவல்கள், மிகச் சில எளிய கதைகள். உண்மையில் சித்தர்கள் யார்? இவர்கள் பிறப்பதில்லை. அவதாரமா என்றால் அதுவும் இல்லை. குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதன் பொருட்டு யுக யுகமாக ‘அனுப்பி வைக்க’ப்படுகிற சிவ சொரூபங்கள். சித்தர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் முதல் தமிழ் நூல் அநேகமாக இதுதான். சுவாமி ஓம்கார், நாத பாரம்பரிய வழி வந்தவர். தனி மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் நிறுவனர். வேதகால வாழ்க்கை முறையை மீண்டும் உணர நாத கேந்திரா என்ற வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கியவர்.