Description
விஷ்ணுவந்தார் பெரும்பாலான கதைகளில் இரண்டு விசயங்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. அதாவது கதையின் கருவுக்கு ஒப்பிடாக அல்லது தொடர்பான ஒரு பொருள் வைத்து புனையப்பட்ட கதைகளாக இருக்கின்றன. அவை அனேகமாக இயற்கையை சார்ந்தே காட்சி படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றொன்று ஒரு முன்கதை அதை தொடர்ந்து பின் நகரும் கதை. தொகுப்பு 10 கதைகளை உள்ளடக்கியது. ஒன்று இரண்டை தவிர மீதமுள்ள கதைகள் கொஞ்சம் நீண்ட கதைகளாக இருக்கின்றன. தொடர்ந்து ஒரே மூச்சில் படித்து முடிக்க முயன்றாலும் நீட்சி காரணமாக கொஞ்ச அசதியாகிறது. இருந்தாலும் கதையின் போக்கு கரைகடக்க வைத்துவிடுகிறது. எல்லா கதைகளிலும் ஒரு சோகமோ அல்லது ஓர் இழப்பின் பலனோ வெளிப்படையாகவோ மறைந்தோ காணப்படுகின்றன. "விஷ்ணு வந்தார் ", "அது நீ", "பாஞ்சஜன்யம்", "இடிந்த வானம்" போன்ற கதைகளை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த புனைவின் கட்டமைப்பு காட்சியாகவும் நல்ல வாசிப்பனுபவமும் கொடுக்கிறது.