அரக்கர்- வி.பி. சிங் வாழ்க்கை வரலாறு


Author: தேபாஷிஷ் முகர்ஜி

Pages: 619

Year: 2023

Price:
Sale priceRs. 695.00

Description

சமூக ரீதியிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்தவருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுதான் வி.பி. சிங்கின் அரசியல் வரலாற்றில் உச்சம். இந்திய வரலாற்றிலும் அது ஒரு மறக்க முடியாத பக்கம். இந்துச் சமூகத்தில் உள்ள சாதியப் படிநிலைகளின் காரணமாக பின்தங்கியுள்ள மக்களை கை தூக்கி விட இந்திய அரசியல் சாசனம் முயற்சித்தது. அதன் விளைவாக பட்டியல் சாதியினருக்கும் பட்டியலினப் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை. இது தொடர்பாக ஆய்வு செய்ய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. மண்டல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரும் அது நீண்ட காலமாக அமல்படுத்தப்படாமலே இருந்தது. 1990 ஆகஸ்ட் 7ம் தேதியன்று அந்த அறிக்கையை அமல்படுத்தி சட்டமாக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் வி.பி. சிங். இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் சமூக பொருளாதார கல்வி ரீதியிலான மாற்றங்களுக்கு அந்த அறிவிப்புதான் விதையாக இருந்தது.

You may also like

Recently viewed