Description
"ஏதேது... சோழ இளவல் இப்போதே என்னைப் பிழிந்து சாறாகக் குடிக்கத் தீர்மானித்து விட்டார் போலும்?", என்றாள் வேள்விழி... ஆனால் அந்த இறுக்கத்தில் எழுந்த கிறக்கத்தில் இலயித்து இன்புற்றாள்.
" வேல்விழி! எப்படி நான்தான் என்று கண்டுபிடித்தாய்? நீ பாண்டிய இளவரசி என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாயே!" என்று குழைந்து குரல் எழுப்பினான் நலங்கிள்ளி.
உலகின் அத்தனை பூக்களையும் கொண்டு மெத்தென்று பிரம்மன் சிருஷ்டித்திருந்த வேல்விழி பூவுடலை மிதமிஞ்சிய காதலில் வளைத்து அணைத்திருந்த நலங்கிள்ளி நினைவுக்குத் திரும்பினான்.