Description
இதுவரை ஒன்பது தொழில் நுட்ப நூல்களை கொடுத்துள்ள சி. ஜெ.ராஜ்குமாரின் பத்தாவது நூலாக டிஜிட்டல் நிறங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள் மற்றும் கலைநயமிக்க காட்சிகளாக உருவாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து விவரங்களையும் பற்றி அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார். மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர்கள் திரைப்படங்களில் உருவாக்கிய நிறத் தோற்றங்கள்,காட்சி களின் போக்குகளுக்கு ஏற்ப எப்படி ஒரு வண்ணத்தை தேர்வு செய்வது போன்ற முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய நூலாக வெளியாகியுள்ளது. முழுவதும் வண்ணம்.