இலங்கை எழுதித் தீரா சொற்கள்


Author: ரமாதேவி ரத்தினசாமி

Pages: 240

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

இலங்கை யின் வளம், சிறப்பு, வரலாறு, வாழ்வியல் தொடர்பார் ன எண்ணற்ற விஷயங்களை
பெருமிதத்துடன் நினைவுகூரும் பதிவுகளைக் கொண்டிருக்கிறது இந்த நூல்.
42 இயல்கள் கொண்ட இந்த நூலொரு முழுமையான பயண நூலோ, வரலாற்று நூலோ அல்ல
என்றே ஆசிரியர் குறிப்பிட்டாட் லும் இரண்டுமாகவே அமைந்திருக்கிறது.
மீண்டும் ஒலிபரப்பைத் தொடங்கிய இலங்கை வானொலி சேவையைக் குறிப்பிடும்போது,
ஆசியாவின் முதல் வானொலி நிலையம், உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற
பெருமையையும் பேசுகிறார் ஆசிரியர்.ர்
உணவுகளைப் பேச எடுத்துக் கொள்ளும் போது, ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர் உணவுப்
பழக்கங்கள் விவரிக்கப்படுகின்றன. அதைப் போலவே, பெருக்குமரம், மன்னார் பாலம்
பற்றியும் ஏராள தகவல்கள்.
தமிழுக்கு மதுவென்று பேர் என்ற கட்டுரையில் இலங்கைத் தமிழ்ச் சிறப்புகளைக்
குறிப்பிடுவதுடன், 'ஓ' என்ற ஓரெழுத்துத் பேச்சுச் வழக்குச் சொல்லின் பெருமையும்
விவரிக்கப்படுகிறது. எரியும் நினைவுகள் மற்றும் கறை படிந்த கருப்பு ஜூலை என்ற
இயல்களைத் தொடர்ந்து வரும் சில இயல்களில் இலங்கைத் தமிழர் துயரம் பேசப்படுகிறது.
நாங்கள் ஏன் அகதிகளானோம்? பெரிதும் கவனிக்க வேண்டிய அனுபவத்தைப் பகிர்கிறது.
ருசிக்கும் தேயிலையின் கசக்கும் உண்மைகள், பெரு நூலாக எழுதப்பட வேண்டிய
விஷயங்களைக் கொண்டுள்ளது. தன்னைத் தானே தகவமைத்துத்க் கொள்ளும் சாதியமும்
குறிப்பிடத் தக்க கட்டுரை.
இலங்கை யைப் பற்றி, ஈழத்தைப் பற்றிப் பெருந்துயரங்களையே வாசிக்க நேர்ந்துள்ள
நிலையில், சற்று மாறுபட்டட் தாக வந்திருக்கிறது இந்த நூல்.

You may also like

Recently viewed