Description
மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் இவை. அந்த புள்ளியில் இருக்கும் பாவனைகள், கரவுகள், கண்டடைதல்கள், பரவசங்கள். அதைச் சொல்லிவிடவே எல்லா புனைவு உத்திகளும் இவற்றில் கையாளப்பட்டுள்ளன.