Description
பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் சினிமாவாக ஆனதை ஒட்டி இணையவெளியில் ஒரு கூட்டுவிவாதம் நிகழ்ந்தது. பொதுவாக தமிழ்ச்சூழலில் எதுவுமே சினிமா சார்ந்து மட்டுமே பேசப்படும். ஒரு சினிமா வெளிவரும்போது கவன ஈர்ப்புக்காக எல்லா தரப்பும் அதைச்சார்ந்து பேசுவார்கள். ஆகவே பலமுனைகளில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் ஐயங்களும் முன்வைக்கப்பட்டன. பொன்னியின் செல்வன் படத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அந்த விவாதங்களை ஒட்டி எழுதிய கட்டுரைகளும் பதில்களும் இந்நூலில் உள்ளன. வழக்கம்போல இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு சோழர்கள் பற்றியும் தமிழ் வரலாறு பற்றியும் ஒட்டுமொத்தமான ஒரு சித்திரத்தை அளிக்க முயல்கிறார்