Description
சிந்துவெளிப் பண்பாடு, அதன் மொழி குறித்த புதிர்களுக்கும் திராவிட மொழி பேசும் மக்கள் தோற்றம் குறிப்பாக தொல்தமிழரின் வரலாறு சார்ந்த புதிர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நிறுவுகிறது ஒரு பண்பாட்டின் பயணம். இவ்விரண்டு சிக்கல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சங்க இலக்கியங்களில் மீள்நினைவுகளாக வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த நிலவியல் கூறுகளும் அதன் மரபுகளும் காணப்படுவதால் சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் பண்டைய தமிழ்நாட்டிற்கும் இடையிலான கால, நில எல்லைகள் திராவிடக் கருதுகோளை எடுத்துரைப்பதற்குத் தடையாக இல்லை. புவி தகவல் அமைப்பு என்ற நவீன தொழில்நுட்பம் கொண்டு இடப்பெயர்களை ஆராய்ந்து, பண்டைய புலப்பெயர்வுகள் நிறுவப்படுகிறது.