Description
தேங்கிக் கிடந்த சோழநதியை மடைமாற்றம் செய்து திருப்பி
காட்டாறாக பாயச் செய்தவன் விஜயாலய சோழன். அவனுக்கு
நூறாண்டுகளுக்குப் பிறகு வந்தவன் ஆதித்தகரிகாலன்.
இவன் இரண்டாம் பராந்தகனுக்குப் பிறந்தவன். பராந்தகனுக்கு
இரண்டு மனைவிகள். வானவன்மா தேவியாருக்கு ஆதித்த
கரிகாலன், ராஜராஜன், குந்தவை என்று மூன்று குழந்தைகள்
பிறந்தனர். குந்தவை தனது பெற்றோர் சிலைகளை தஞ்சாவூர்ப்
பெரிய கோயிலில் அமைத்திருக்கிறார்.
ஆதித்த கரிகாலன் பட்டம் பெறவில்லை. ஆனாலும் தந்தைக்கு
உதவியாக இருந்திருக்கிறான். அவன் பெரிய வீரனாகத் திகழ்ந்தான்,
பாண்டியர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தான். ராஷ்டிர கூடர்
களுக்குத் தலைவலி ஏற்படுத்தினான். அவனை தீர்த்துக் கட்ட பலரும்
காத்திருந்தனர். இந்த நிலையில் வீரபாண்டியன் தலைகொண்ட
அந்த மாவீரன் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டான்.
உத்தமசோழன், ரவிதாசன், பாண்டியனின் ஆபத்து உதவிகள்,
ராஜராஜன், குந்தவை, வந்தியத்தேவர், என்று பலபெயர்கள்
அடிபடுகின்றன.
இந்த மர்மம், பல எழுத்தாளர்களுக்கும், நாவலாசிரியர்களுக்கும்
இன்றுவரை கதைக்கருவாக இருந்து வருகிறது. அட்சயபாத்திரமாக
இருந்து பல கதைகளை அள்ளித்தருகிறது. அந்த வகையில் கல்கி
முதல் காலச்சக்கரம் நரசிம்மா வரையில் அந்தக் கொலையைப் பற்றி
எழுதியவற்றை படித்த நானும், ஒரு புதிய முயற்சி செய்து இந்த
நாவலை வடிவமைத்து இருக்கிறேன்