Description
சங்க இலக்கியங்களில் அகநானூறு, புறநானூறு ஆகிய இரண்டும் தனித்துவம் பெற்றவையாகும். உலக இலக்கியங்களில் ஆண்மகனை தலைவன் என்றும், பெண்ணை தலைவி என்றும் வழங்கப்பட்டிருப்பதனையும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற ஈர்ப்பு, காதல், தோழியின் உதவிகள், தாயின் பங்கு, பிரிதல், ஏங்குதல் போன்ற அனைத்து விதமான உணர்வுகளையும், குண நலன்களையும் விரசமில்லாமல் கண்ணியமாக விவரிக்கும் சிறந்த நூலாக அகநானூறு இன்றும் தொடர்கிறது. பெண்களை போகப் பொருளாகவும், வெறும் அழகு பொம்மைகளாகவும், விரசமாக வர்ணிக்கப்பட்டும், ஆணுக்கு அடிமையாகவும், ஆணின் ஆசைகளை தீர்த்து வைக்க வேண்டியவளாகவும் உள்ள மற்ற நாட்டு கலாச்சாரம் நமது தமிழர் தம் வழக்கத்தில் இல்லாமல் இருந்ததனை நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
புறநானூறு, புறவாழ்க்கையில் நம்மை ஆண்ட மன்னர்களும், மக்களும், சான்றோர்களும் வீரம், கொடை, சமதர்மம், நீதி, நேர்மை, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற நற்குணங்களோடு வாழ்ந்தவர்களின் உயரிய பண்புகளை விவரிக்கும் நூலாக அமைந்திருக்கிறது. இந்நூல் முழுக்க உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கிறது. கற்பனையான மனிதத்தன்மையற்ற நிகழ்வுகள் எதுவும் இல்லை. அதே சமயத்தில் நம் தமிழரிடமில்லாத நயவஞ்சகம், சூழ்ச்சி போன்ற செயல்கள் எதுவும் இந்நூலில் இடம் பெறவில்லை என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.
அப்படிப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்முள் புகுத்த முயற்சிகள் நடைபெற்ற நிலையில் தான், அவற்றில் இருந்து நம்மை அரண் அமைத்து காத்திடவே நமது திருக்குறள் உருவாகி இருக்கக்கூடும் என்பது எனது கருத்து.