எளிய தமிழில் சோழர் வரலாறு


Author: டாக்டர் மா. இராசமாணிக்கனார்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 270.00

Description

சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் பதிப்பிற்குத் தந்திருக்கும் முன்னுரையே இதற்கு ஆதாரம். இராசமாணிக்கனாரின் காலத்து ஆய்வுத் தமிழில் அமைந்த நூல் இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் எளிய தமிழில் முழுமையாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுயுகத்துக்கு முன்பான சோழர்கள் தொடங்கி, சோழன் நலங்கிள்ளி, கிள்ளி வளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிக்கிள்ளி என அனைத்து மன்னர்களையும் ஆராய்ந்து, எழுச்சி பெற்ற சோழர்கள் காலத்தைச் சேர்ந்த முதல் பராந்தக சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்களின் ஆட்சியையும் அவர்களது சாதனைகளையும் விவரித்து, பின்னர் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் வரையிலான அனைத்து சோழர்களின் வரலாறும் ஆய்வுபூர்வமாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு, அவர்களது கொடை, கல்வெட்டுகள், நிவந்தங்கள், சோழர்கள் கட்டிய கோவில்கள், சோழர்களின் படையெடுப்பு என இந்த நூலில் இடம்பெறாத தகவல்களே இல்லை எனலாம். தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்ள நினைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய அரிய நூல் இது.

You may also like

Recently viewed