நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு


Author: முனைவர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

வரலாற்று நிகழ்வுகள் தனிமனித விருப்பங்களினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஒரு சமூகம் சார்ந்த ஒருமித்த விருப்பங்களால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். தலைவனின் எண்ணமும் மக்களின் விருப்பமும் கிடைமட்டத்தில் சமமாக இருக்கும்பட்சத்தில் அங்கு அமைதியான வாழ்வியல்சூழல் தோற்றம் பெறுமென்ற மானிடவியல் கோட்பாட்டினை அப்படியே அடியொற்றியவர்கள் சோழ மன்னர்கள். அதனால்தான் அவர்களால் உருவாக்கப்பட்ட ஊர்கள், நகரங்கள் போன்றவை நிலவியலை
மையமாக வைத்து உருவாக்கப்பட்டபோதிலும் மக்களின் இயக்கவியலின் அடிப்படையிலேயே அவை வடிவமைக்கப் பட்டிருந்ததையும்
பார்க்கமுடிகிறது. எனவே தான் காலங்கள் கடந்தாலும் அப்பழம்பெரும் ஊர் மற்றும் நகரங்களில் வாழ்ந்து வரும் மக்கள் இன்று வரை அமைதியான வாழ்வியல் சூழலோடு வாழ்ந்து வருவதைச் சமகாலத்திலும் பார்க்கிறோம்.

மன்னனின் மனநிலை மட்டுமே நகர அமைவியலைத் தீர்மானித்து விடமுடியாது. நிலவியலின் தகவமைப்புதான் ஒரு நகரத்தின் உறுதிப் பாட்டினைத் தீர்மானிக்கிறது. இக்கருதுகோளினை நன்கு உணர்ந்ததாலேயே அக்காலக் கட்டடவியலாளர்களும், நிலம்சார் ஆய்வாளர்களும் இணைந்து உருவாக்கிய நகரங்கள் இன்றும் மிடுக்குடன் இருப்பதைத் தமிழகத்தில் காணமுடிகிறது. தமிழர்கள் ஊர், நகரம், தலைநகரம் போன்றவற்றை உருவாக்கும் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் பாரம்பரியம் மிக்கவர்களாக இருந்துள்ளனர் என்பதைக் கங்கைகொண்ட சோழபுரம் நகர உருவாக்கம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
- ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் -

You may also like

Recently viewed