Description
ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும்.
அந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை, கால் விளங்கவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச் சாரத்துக்குச் செய்யப்படும் ஓர் நுண் அவமதிப்பு.” சொல் புதிது பதிப்பகத்தில் ’பொன்னிறப்பாதை’ என்ற பெயரில் வெளிவந்த நூலில் உள்ள சில கட்டுரைகள் தன்மீட்சி தன்னைக்கடத்தல் என்ற இரு புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தவிர உள்ள கட்டுரைகள் மற்றும் அதைப்போன்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
பொன்னிறப்பாதை போன்றே பரிசளிக்கத்தக்கது.