Description
இது, 1971ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற போரில் ஈடுபட்டுப் போர்க் கைதியாகப் பாகிஸ்தானிய சிறையில் துன்பப்பட்ட இந்திய போர் விமானியின் உண்மை அனுபவப் பதிவு. போரில் ஈடுபட்ட விமானியரின் வீரதீரத்தையும் சிறையில் அவர்களது எதிர்வினையையும் அவரவர் நோக்கில் எடுத்துரைக்கிறது. போர்க் கைதிகளாகப் பிடிபட்ட போர் போர் விமானியரின் உள்ள உணர்வுகளையும் போர் பற்றிய அனுபவங்களையும் மரண நிகழ்வுகளையும் இழப்புகளையும் தனிமைப்படுத்தப்பட்ட தன்மையையும் துக்கத்தையும் நுட்பமாக எடுத்துரைக்கிறது. சிறை அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதையும் உதவியாளர்கள் நடந்து கொண்ட விதத்தையும் விசாரணையின் போது விசாரணை அதிகாரிகள் காட்டிய கொடூரத்தையும் பாகிஸ்தானிய மக்களின் அன்பினையும் உள்ளது உள்ளபடி உணர்த்துகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வான் வெளியில் நடைபெற்ற போர் என்பது, இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் மனப் போராட்டத்தின் வெளிப்பாடு என்பதையும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.