Description
எத்தனை முறை படித்தாலும், நம்மை இத்தாவலோடு இனங்காண முடியும் என்பது தான் இந்த முதல் சிறப்பு, ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் பதின்ம வயதைத் தாண்டி, கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கும்போது சந்திக்கும் மன ரீதியான அலைச்சல்கள், திண்டாட்டங்கள், குழப்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த சித்திரம் தான் இந்த நாவல் தம்மைப் பற்றி உயர்வான இண்டெலக்சுவல்' தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, புற உலகை புறங்கையால் தட்டிவிடும் மனப்போக்கு இந்த வயதுக்கே உரித்தான தன்மை அதேசமயம், எதிர்ப்பாலினரிடம் ஒருவித அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், அது கிடைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதும் இன்னொரு தன்மை, இக்கதையில் வரும் பிரதான மூன்று பெண் பாத்திரங்களும், மிக மிக வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவரிடமும் ராமசேஷன் பழகுவதும், அவர்களிடம் இருந்து நுட்பமான பல விஷயங்களைக் கற்றுத்தேர்வதும் கதைக்கு வலு சேர்ப்பவை. இளமை என்ற புகைமூட்டமான காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இவ்வளவு நிஜமாக, சத்தியமாக யநார்த்தமாக வேறு யாகும் தமிழ் புனைவுலகில் எழுதியதாகத் தெரியவில்லை. அதுவும் இது 1960களில் வெளிவந்த நாவல் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு. அன்றைய தில்லி வாழ் இளைஞளை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அந்நியமாதல் என்ற தன்மை, இன்று நாட்டில் உள்ள இளைஞர்களிடம் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். காலத்தால் முன்செல்வது ஒரு படைப்பாளியின் தனித்தன்மை. அது தான் அவளது ஆகிருதி. ஆதவன் என்ற மகத்தான கலைஞன், இப்படிப்பட்ட படைப்பை தந்த முன்னேர்.