Description
இன்று நேற்றல்ல... 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே பெரும் தொடர்பு இருந்துள்ளது. தமிழர்கள் செல்லாத நாடுகளே இல்லை. எனினும், காம்போஜம் என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கம்போடியாவுக்கு வர்த்தகம் மற்றும் அரசியல் ரீதியாக தமிழர்கள் சென்று வந்துள்ளனர். ரத்தினகிரி எங்கிருக்கிறது என கேட்டால், வேலூர் பக்கம் என பதில் வரும். ஆனால், கம்போடியாவிலும் ஒரு ரத்தினகிரி இருக்கிறது. என்ன அழகான தமிழ்ப்பெயரில், இந்த தென்கிழக்காசிய நாட்டில் ஒரு ஊர் இருக்கிறது. இப்படி ஏராளமான சுவையான செய்திகளைத் தாங்கியிருக்கிறது இந்த நூல். படித்தவுடன், இந்த நாட்டைப் பார்த்து வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் இந்த புத்தகம் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும்.