Description
ஏகேஜி எல்லா ஜனநாயகவாதிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் அரிய பண்பாட்டை விட்டுச் சென்றிருக்கிறார். மக்களின் விடுதலைக்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். அவருடைய ஆழமான மனிதநேயம் மார்க்சியத்தில் இருந்து ஜனித்தது. ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக விவசாயிகளுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். தோழர்களின்பால் அவர் கொண்ட பாசம், பிறரைப் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வு, அநீதியின் முகத்தில் அறையும் வீரம், அவரை மக்களின் மனம் கவர்ந்த மனிதராக உயர்த்தியது. முற்போக்கான கொள்கை உடைய எல்லோருக்குமே அவர் மனம் கவர்ந்த மாவீரர்தான்.