Description
திருமதி. இரா.சைலஜா சக்தி, தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு முதுகலை கணிதப்பட்டதாரி. மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய அய்யனார் குதிரை என்ற கதை பரிசு பெற்றது. அய்யனார் குதிரை 2017 ஜனவரி இதழில் வெளி வந்துள்ளது.
அமுதசுரபி நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது பொம்மிபுரம் என்ற குறுநாவல் பரிசு பெற்றது. இது கணியான் ஆட்டம் எனப்படும் கிராமியக் கலையை மையப்படுத்தி எழுதப்பட்டது. பொம்மிபுரம் 2017 ஜூலை இதழில் வெளிவந்துள்ளது.
ராவண நிழல் என்ற இந்த நூல் தோல்பாவைக் கூத்துக் கலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இவர் இதற்காக நாஞ்சில் நாட்டில் களப்பயணம் மேற் கொண்டார். பாவைக் கூத்துக் கலைஞர்களின் வீடுகளுக் குச் சென்று அவர்களை நேரில் சந்தித்து பல தகவல் களைத் திரட்டியுள்ளார். கூத்து நிகழ்த்துவதை நேரில் கண்டு அது குறித்த விபரங்களையும் சேகரித்துள்ளார். மேலும் கிராமியக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளார்.