எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்


Author: என்.சொக்கன்

Pages: 150

Year: 2023

Price:
Sale priceRs. 130.00

Description

ஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்!
இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்கான வாசல்களைத் திறக்கிறது. சரியான திறமை இருப்பவர்கள் அத்துடன் ஆங்கிலப் பேச்சையும் சேர்த்துக்கொண்டால் பல உயரங்களுக்குச் செல்லலாம், வெற்றிக்கொடி கட்டலாம்.
பலரும் நினைப்பதுபோல், ஆங்கிலத்தில் பேசுவது அப்படியொன்றும் கடினமில்லை. சில எளிய அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் பயிற்சியெடுத்தால் மிக விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடலாம். இந்தப் புத்தகம் அதை எளிமையாகவும் அழகாகவும் கற்றுத்தருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடுவோர், சுயதொழில் முனைவோர், இல்லத்தரசிகள் என அனைவருக்கும் பயன் தரும் சூப்பர் ஹிட் புத்தகம், வாங்கிப் படியுங்கள், ஆங்கிலத்தில் அசத்துங்கள்! உலகம் உங்கள் கையில்!

You may also like

Recently viewed