Description
சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர்
மு. து. பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள்,கனவுகள், போராட்டங்கள் அவற்றை ஓவியமாகத்
தீட்ட தன் கையில் இருக்கும் வண்ணங்கள் அனைத்தையும் செலவிட்டு இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் காணப்படும் எளிய மனிதரின் ஆழ்மனதைப் பேச வைப்பதின் மூலமாகக் கதை சொல்லும் உத்தியைக் கையாள்கிறார். மாணவப் பருவத்தில் முற்போக்கு அணியில் சென்னை நகரத் தெருக்களில் சலங்கை கட்டி ஆடியும் வீதி நாடகங்களில் நடித்தும் வந்த மனசாட்சி உள்ள ஒரு கலைஞன் எழுதிய இந்த நாவல் சென்னைத் தமிழுக்கு ஒரு சீதனம். மிக விரைவில் வெளியீட்டு விழா காண இருக்கும் மு. து. பிரபாகரனை வாழ்த்துகிறேன்.
கலை விமர்சகர் / கவிஞர்